சாம்பார் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு! உடம்புக்கு நல்லதா?


சுவையான சாம்பார் அமைந்துவிட்டால் இட்லியோ, பொங்கலோ, வடையோ அல்லது சாதமோ வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டுவிடுவோம்.

தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் புகழ்பெற்று, நீக்கமற நிறைந்திருக்கிறது சாம்பார்.
சாம்பார் கலோரி நிறைந்தது. ஒரு கப் சாம்பாரில் 308 கலோரிகள் உள்ளன. பொட்டாசியம் 265 மி.கி., கொழுப்பு 9 கிராம், பொட்டாசியம் 265 மி.கி., நார்ச்சத்து 3 கிராம், சர்க்கரை 3 கிராம், புரோட்டீன் 15 கிராம், சோடியம் 14 மி.கி உள்ளன.

நமக்கு எந்தப் பருப்பு பிடிக்குமோ, அதைக்கொண்டு சாம்பார் தயாரிக்கலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
சாம்பாரில் நம் உடலுக்கு நன்மை தரும் என மருத்துவர் பரிந்துரைக்கிற உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், முருங்கைக்காய், வெண்டைக்காய், வெங்காயம், கத்திரிக்காய், தக்காளி, முள்ளங்கி… என எந்தக் காயையும் சேர்த்து தயாரிக்கலாம்.

சாம்பார் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு! உடம்புக்கு நல்லதா?

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், அதிக காய்கறிகளைச் சேர்த்த சாம்பாரை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆனால், சாம்பாரில் சேர்க்கப்படும் புளி, உப்பு ஆகியவை அளவோடு இருக்க வேண்டும்.

அதிகப் புளி சேர்த்தால், அலர்ஜி, பல் எனாமல் பாதிக்கப்படுவது, பித்தப்பைகளில் கற்கள் உருவாவது, நாளங்களில் சுருக்கம் ஏற்படுவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும்.

சாம்பாரில் பயன்படுத்தப்படும் மஞ்சள் பொடி, நீர், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் ஆகியவை ஜீரணத்துக்கு உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியது. சாம்பாரில் பயன்படுத்தப்படும் மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, புளி, கடுகு, மிளகாய் பொடி ஆகியவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இவை உடல் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் உதவுகின்றன.

சாம்பார் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு! உடம்புக்கு நல்லதா?



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.