சீன அறிவிப்பால் பாகிஸ்தான் கொண்டாட்டம்.. அப்போ இலங்கை..!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் இலங்கையை போல கடுமையான நிதிப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், அந்நாட்டில் போதுமான மின்சாரம், எரிபொருள், உணவு பொருட்கள் ஆகியவை இல்லாமல் தவித்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசு ஐபிஎம், உலக வங்கி மட்டும் அல்லாமல் தனது நட்பு நாடுகளிலும் கடன் பெற முயற்சி செய்து வந்தது.

இதற்கிடையில் ஐபிஎம், உலக வங்கி-யின் உதவிகள் வருவதற்கு முன்பு சீனா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

ஹீரோ முதல் டிவிஎஸ் வரை.. இந்த ஒரு விஷயத்திற்காகத் தான் இப்போ போட்டி போடுகிறது..!

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறையால் தவித்து வருவதற்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் சுமார் 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியைக் கடனாக வழங்கச் சீன வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன.

சீனா

சீனா

சீனா பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடன் கொடுத்துள்ள நிலையில் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில் இப்போது கொடுத்துள்ள கடன் பெரிய அளவில் உதவும். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியைப் பெற பாகிஸ்தான் தனது பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையைப் புதுப்பிக்க முயற்சி செய்து வரும் நேரத்தில் சீனா-வின் அறிவிப்பு முக்கியமானது.

IMF நிதியுதவி
 

IMF நிதியுதவி

கடந்த வாரம், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலையைப் பெரிய அளவில் உயர்த்தியது. இது புதிய கடன்களைப் பெற IMF வைத்த முக்கியக் கோரிக்கையாகும்.

மின்சாரம், எரிபொருள்

மின்சாரம், எரிபொருள்

கடுமையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மின்சாரக் கட்டணத்தை 7 ரூபாயும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 30 ரூபாயும் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அரசுக்குக் கூடுதலான வருமானம் வந்தாலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

பாகிஸ்தான் ஜிடிபி

பாகிஸ்தான் ஜிடிபி

பாகிஸ்தான் அரசு அடுத்தப் பட்ஜெட் அறிக்கையில் வருவாயை அதிகரித்து, செலவைக் குறைப்பதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐஎம்எப்-ன் அடுத்த நிதியுதவி பேமெண்ட் அடுத்த IMF இணக்க பட்ஜெட்டுக்குப் பிறகுதான் என பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan gets 2.3 billion dollar refinancing from China to refurbish its economy

Pakistan gets 2.3 billion dollar refinancing from China to refurbish its economy சீன அறிவிப்பால் பாகிஸ்தான் கொண்டாட்டம்.. அப்போ இலங்கை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.