செங்குன்றம் | இளைஞர்கள் மீது லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

செங்குன்றம்: செங்குன்றம் அருகே தனியார் லாரி பார்க்கிங் யார்டில் மதுபோதையில் நடந்த தகராறில் இளைஞர்கள் மீது லாரி ஏற்றி கொலை செய்த விவகாரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம் தனியார் லாரி பார்க்கிங் யார்டில் கடந்த 1-ம் தேதி இரவு கமலக்கண்ணன், நவீன், குமரன் ஆகியோர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும், அங்கு லாரி எடுக்க முயன்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தகண்ணையா லால் சிங் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோபமடைந்த கண்ணையா லால் சிங், அவர்கள் மீது லாரியை ஏற்றியதாக தெரிகிறது. இதில் கமலக்கண்ணன், குமரன் உயிரிழந்தனர். நவீன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதன்மூலம் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் ஆகியோரை செங்குன்றம் போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.