சென்னை அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பு அருகே இன்று (ஜூன் 4) முதல் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
ஸ்பென்சர் சந்திப்பில் இருந்துவரும் வாகனங்கள் ஸ்மித் சாலை வழியாக ஒயிட்ஸ் சாலையை அடையலாம் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
டவர் கிளாக் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.
பட்டுலாஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்களும் ரேமண்ட்ஸ் துணி கடை எதிரே திருப்பம் செய்து செல்லலாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.