சென்னையில் 32 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக மாற்றம் – காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

காவல் நிலையத்தில் விசாரணை கைதி கொலை மற்றும் பாஜக பிரமுகர் கொலை சம்பவத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிப்பு அடைந்திருப்பதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.  இந்த நிலையில் சென்னையில் சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து காவல் ஆய்வாளர் அங்கு நியமிக்கப்படாமல் இருந்தது. தற்போது தலைமை செயலக காலனி காவல் ஆய்வாளராக  கமலகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல பரபரப்பை ஏற்படுத்திய சிந்தாதிரிப்பேட்டை பாஜக பிரமுகர் பாலசந்தர் கொலை வழக்கில் சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அந்த இடத்திற்கு தற்போது காவல் ஆய்வாளர் ராஜராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

image
இதே போல எழும்பூர்,வேப்பேரி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு 32 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் இந்த வாரத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கலாம்: ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 5 பேருக்கு வலைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.