சென்னை: சென்னை ஐஐடிக்கும் சமூக நீதிக்கும் நீண்ட தூரம் என்று சு.வெங்கடேசன் எம்பி விமர்சித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ.ஐ.டி க்கும் சமூக நீதிக்கும் காத தூரம். சென்னை ஐஐடி ஆசிரியர் நியமன முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட ஓபிசி, எஸ்சி, எஸ்டி காலியிடங்களில் 50 சதவீதம் இடங்கள் (26/ 49 இடங்கள்) நிரப்பப்படவில்லை “யாரும் தகுதி பெறவில்லை” எனக் காரணம். மத்திய கல்வி அமைச்சகமே உடனடியாக தலையிடு!” என்று தெரிவித்துள்ளார்.
The distance between IIT and social justice is really long.
Publication of results of teachers appointment in Chennai IIT.
50 pc of vacant seats announced for OBC, SC&ST (26/49 seats) not filled.
“no one is qualified” is the stated reason. @dpradhanbjp 1/2#IIT #Reservation pic.twitter.com/j6ezJHXKoY
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 4, 2022