சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அரசியல் பரப்புரைகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை விலக்கி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் பெயரில், அரசியல் சார்ந்த பரப்புரைகளை மேற்கொள்வதற்கு முற்றிலும் தடை விதித்து, துணைவேந்தர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை உள்ளிட்டவை எதிர்ப்பு தெரிவித்தன.
தடை நீக்கம்
இந்நிலையில், நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அரசியல் சார்ந்த பரப்புரை மேற்கொள்ள முற்றிலும் தடை விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்
துள்ளார்.