ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆகவும் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆகவும் அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமையான நேற்று ஜெர்மனியின் முனிச் நகரம் நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில் பவேரியாவில் உள்ள கார்மிஷ்-பார்டென்கிர்சென் என்ற ஸ்கை ரிசார்ட்டின் வடக்குப் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.
பள்ளி மாணவர்கள் உட்பட 60 பேர் வரை விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த நிலையில், நேற்றைய மீட்பு நடவடிக்கையின் தகவலில் படி 4 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், 30 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
Pic: AP
இந்தநிலையில், ரயில் பாதைகள் மூடப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக இன்று நடைப்பெற்று வந்த நிலையில், உயிரிழப்பு 5 ஆக அதிகரித்து இருப்பதாகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து இருப்பதாகவும் காவல்துறை மற்றும் மீட்பு குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக அந்தப்பகுதியின் உள்ளூர் காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் தகவலில், ரயில் விபத்தில் 44 பேர் வரை சிறிய முதல் பெரிய காயங்களுடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரயில் பாதைகளில் இருந்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை வெளியேற்றும் முயற்சிகள் சில தோல்வியில் முடிந்தாலும், இறுதியில் கடுமையான முயற்சிகளுக்கு மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக ரயில் பெட்டிகளை ரயில் பாதைகளில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு ஜெர்மனியின் உள்ளூர் மற்றும் தேசிய தலைவர்கள் பார்வையிட்டு விபத்து குறித்த தங்களது அதிர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
Pic: Szalay Péter
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவை அவமானப்படுத்தக் கூடாது…பிரான்ஸ் ஜனாதிபதிக்கு உக்ரைன் கண்டனம்!
மேலும் ஜெர்மனியின் பவேரியன் பகுதியில் நடைப்பெற்ற இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து வழக்குரைஞர்கள் மற்றும் பொலிஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.