ரீட்டெயில் உலகில் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றுமொரு இலக்கை எட்டவிருக்கிறது. அதன்படி, இன்ஸ்டன்ட்டாக மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் சேவையை ஜியோ மார்ட் எக்ஸ்பிரஸ் செயலியின் கீழும், தனியாகவும் செய்யவிருக்கிறது.
இந்த திட்டம் முதற்கட்டமாக நேவி மும்பையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் பின்னர் ஜியோ மார்ட் சேவைகள் கிடைக்கும் 200 நகரங்களில் நடப்பு ஆண்டிலேயே விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம்.
இதன் மூலம் பிக் பாஸ்கட், ஸொமேட்டோவின் ப்ளின்கிட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், வால்மார், ஸெப்டோ போன்றவற்றுக்கு ரிலையன்ஸ் ரீட்டெயில் போட்டியாக வந்தமையும்.
ஏற்கெனவே ஸெப்டோவும், ப்ளின்கிட்டும் உடனுக்குடன் டெலிவரி செய்யும் சேவைகளை செய்துவரும் வேளையில், ஜியோ மார்ட் 90 நிமிடங்களில் டெலிவரி செய்கிறது. அதில் ரூ.199க்கு மேல் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரியும், குறைந்தபட்ச ஆர்டர் மதிப்பை ஜியோ மார்ட் விதிக்கவில்லை.
ரிலையன்ஸ் ரீட்டெயிலில் ஆர்டர் செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஜியோ மார்ட் மூலம் டெலிவரி செய்யப்பட இருக்கிறது. மளிகை பொருட்கள் மட்டுமல்லாது, ஹோம் கேர் வகைகளையும் டெலிவரி செய்யவிருக்கிறது. இதனையடுத்து மருந்து பொருட்கள், ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட கேட்ஜெட்களையும் டோர் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.
இதுபோக மெட்ரோ நகரங்களில் டன்ஸோ டெலிவரி சேவையை பயன்படுத்தியும் ரிலையன்ஸின் பொருட்களை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக டன்ஸோவின் 26 சதவிகித பங்குகளை வாங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ரிலையன்ஸ் ரீட்டெயின் அதிகாரி தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM