திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 300 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்ட விழாவிற்கான சுபமுகூர்த்தக்கால் நாடும் வைபவம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.