வாஷிங்டன்:அமெரிக்காவில், தேவாலயத்துக்கு வெளியே இரண்டு பெண்களை துப்பாக்கியால் சுட்ட நபர், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் ஆமெஸ் என்ற இடத்தில், ‘கார்னர்ஸ்டோன்’ தேவாலயம் உள்ளது. இதன் வாசலில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவரும் உயிரிழந்தனர். அதன் பின், அந்த மர்ம நபர் தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த பெண்கள் யார், அவர்கள் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் தெரியவில்லை. இந்த கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜோ பைடன், அமெரிக்க அதிபர்
அதிபர் வருத்தம்!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்கு, பார்லிமென்டில் எம்.பி.,க்களின் ஆதரவு வேண்டும். அவ்வாறு ஆதரவு கொடுக்காத எம்.பி.,க்களுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பர்.
வாஷிங்டன்:அமெரிக்காவில், தேவாலயத்துக்கு வெளியே இரண்டு பெண்களை துப்பாக்கியால் சுட்ட நபர், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் ஆமெஸ் என்ற இடத்தில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.