எதிர்வரும் வாரத்தில் மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம்
இதன்படி, 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.