This 6 salads make you to reduce high blood pressure, நம்மில் சிலருக்கே சரியான வேளையில் உணவை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் சரியான வழிமுறைகளை அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுகிறார்கள். நம்மில் பலர் ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் மிக இளமையில் நம்மில் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. இதற்கு தீர்வு காண இந்த 6 வகை சாலட்டுகளை நீங்கள் சாப்பிடுவது அவசியமாகிறது.
மஷ்ரூம் சாலட்
ஒரு கப் நறுக்கிய மஷ்ரூம், 2 வெங்காயம், தக்காளி, அவித்த பச்சை பட்டணி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துகொள்ள வேண்டும். இத்துடன் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு, வினிகரை (vinegar) சேர்த்துகொள்ள வேண்டும்.
பழங்கள் நிறைந்த சாலட்
ஒரு கப் கொழுப்பு சத்து இல்லாத தயிர், பேரிச்சம் பழம், வாழைப்பழம், ஆரஞ்சு பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடலாம்.
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாலட்
அவித்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு 2, வேகவைத்த பீன்ஸ், கேரட், அவக்கடோ, சிலரி ஆகியவற்றுடன் உப்பு, பெப்பர் பவுடரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய் சாலட்
வெள்ளரிக்காய் நறுக்கியது, சுட்ட பூண்டு, வினிகர், பொதினா இலை, உப்பு, பெப்பர் பவுடரை சேர்த்துக்கொள்ளவும். மேலும் தேவைப்பட்டால் தேனும் சேர்த்துகொண்டு சாப்பிடலாம்.
பாசிப் பயறு சாலட்
அவித்த பாசி பயறு, சிறிது எலுமிச்சை சாறு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, வறுத்த சீரகம், மாங்காய் பொடி, மற்றும் கொத்தமல்லியை சேர்த்துள்ளவும்.
சால்மன் மீன் சாலட்
ஆவித்த சாலமன் மீன் துண்டுகள், அவக்கடோ, வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு, பெப்பர் பவுடர், ஆலிவ் ஆயிலை சேர்த்துகொள்ளவும். இந்த வகை சாலட்டுகள் உடலுக்கு அதிக நன்மைகளை உண்டாக்கும்.