நெல்லை பணகுடி அருகே நிறுத்திவைக்கப்பட்ட காருக்குள் விளையாடச் சென்ற 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே லெப்பை குடியிருப்பு என்ற கிராமத்தில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் விளையாடச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. பழுதாகி நின்ற அந்த காரை உள்ளே இருந்து திறக்கமுடியாது எனக் கூறப்படுகிறது; ஆனால் வெளியே இருந்து திறக்கலாம் என்ற நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தைகள் காருக்குள் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. குழந்தைகளுக்கும் வெளியே வர தெரியவில்லை. குழந்தைகளின் தாயார் நீண்டநேரம் தேடியும் குழந்தைகள் கிடைக்காத நிலையில் கடைசியில் காருக்குள் இருந்ததை பார்த்து திறந்துள்ளனர்.
அப்போது ஒரு குழந்தை மற்றும் வாந்தி எடுத்துள்ளது. உடனடியாக பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இருப்பினும் சகோதர சகோதரிகளான 7 வயது நித்திஷா, 5 வயது நித்திஷ், 4 வயது கபிலன் ஆகிய 3 குழந்தைகளும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதேபோன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM