நொய்டா விமான நிலைய ஒப்பந்தத்தை கைப்பற்ற எல்என்டி உள்பட 3 நிறுவனங்கள் முயற்சித்த நிலையில் டாடா நிறுவனம் தனது மேஜிக் மூலம் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது.
நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான பொறியியல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தை டாடா நிறுவனத்தின் உள்கட்டமைப்பு நிறுவனமான டாடா புரொஜக்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
நொய்டாவில் உள்ள யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் விமான நிலையத்தை மேம்படுத்தும் பணியை டாடா நிறுவனம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றுவதற்காக டாடா, எல்&டி உள்பட சில நிறுவனங்கள் முயற்சித்த நிலையில் வழக்கம்போல் தனது மேஜிக்கால் இந்த ஒப்பந்தத்தை டாடா வென்று உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அலகாபாத் விமான நிலையத்திற்கான ஒப்பந்தத்தை டாடா பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது விமான நிலைய ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நொய்டா விமான நிலையம்
நொய்டா விமான நிலையத்தில் விமான முனையம், ஓடுபாதை, வான்வழி உள்கட்டமைப்பு, சாலைகள் பயன்பாடு, நிலப்பரப்பு வசதிகள் மற்றும் துணை கட்டிடங்களை டாடா நிறுவனம் நிர்மானிக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் மிகவும் மேம்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான நிலையமாக நொய்டா விமான நிலையத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு டாடா நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.
தொழில்நுட்பம்
உலகத்தரம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றினை உறுதி செய்து கட்டுமானத்தில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவோம் என டாடா புரொஜக்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விநாயக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வசதிகள்
நொய்டா விமான நிலையத்தில் பயணிகள் முனையம், பயணிகள் வருகைக்கான வசதி, டிஜிட்டல் வசதி, சுற்றுச்சூழல் போன்ற வசதிகளை நவீன தொழில்நுட்பம் மூலம் செய்து கொடுக்கும் என்று டாடா நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மேலும் மூத்த குடிமக்கள் பயணம் செய்வதற்கான வசதி, வணிக பயணிகளுக்கான வசதி ஆகியவையும் செயல்படுத்த இருக்கிறது.
உறுதி
மேலும் நொய்டா விமான நிலையத்தின் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு மேலாண்மை வசதி, பசுமை உள்கட்டமைப்பு ஆகிய தேவைகளை மனதில் கொண்டு இந்த விமான நிலையத்தை வடிவமைப்போம் என்று டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
யமுனா ஏர்போர்ட்
இதுகுறித்து யமுனா இன்டர்நேஷனல் ஏர்போட் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டோப் ஷ்னெல்மேன் அவர்கள் கூறியபோது, ‘இந்த ஒப்பந்தத்தை டாடா நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் எங்கள் திட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்றும், கட்டுமான நடவடிக்கைகளில் வேகம் மற்றும் தரம் இந்நிறுவனத்திடம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டிற்குள் 12 மில்லியன் பயணிகள் பயணிக்கும் திறன் கொண்ட ஒரு விமான நிலையமாக மாற்ற டாடா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tata Projects wins EPC contract for Noida International Airport
Tata Projects wins EPC contract for Noida International Airport | நொய்டா விமான நிலைய ஒப்பந்தம்: டாடா நிறுவனம் செய்த மேஜிக்!