மான்சா: பஞ்சாப்பில் விஐபி.க்கள் பலருக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு கடந்த மாதம் 28-ம் தேதி வாபஸ் பெற்றது. இதில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவும் ஒருவர். ஆனால், மறுநாளே அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அச்சுறுத்தல் உள்ள விஐபி.க்கள் சிலருக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மறைந்த சித்து மூஸ் வாலாவின் வீடு, பஞ்சாப் மான்சா மாவட்டத்தில் உள்ள மூசா கிராமத்தில் உள்ளது. மூஸ் வாலா வீட்டுக்கு, மாநில முதல்வர் பகவந்த் மான் நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
மூஸ்வாலா சுட்டு கொன்றது நாங்கள்தான் என பல ரவுடி கோஷ்டியினர் கூறி வருகின்றனர். கனடாவில் தலைமறைவாகவுள்ள ரவுடி கோல்டி பிரார், மூஸ்வாலா படுகொலைக்கு பொறுப்பேற்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில், டெல்லி போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் ரவுடி லாரன்ஸ் பிஷ்னாய், ‘‘பழிவாங்கும் நடவடிக்கையாக தனது கூட்டாளிகள்தான் சித்து மூஸ் வாலாவை சுட்டுக் கொன்றனர். ஆனால் எனக்கு தொடர்பில்லை’’ என கூறினார். ஆனால் இதை டெல்லி போலீஸார் நிராகரித்துவிட்டனர்.