இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து போராட்டம் வெடிக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்ளிட்ட நகரங்களில் பெண்களும் மெகா பேரணியில் பங்கேற்றனர். தூற்றுக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை சுமந்தும் ஊர்வலமாக சென்றனர்.
