“பாஜக-வை போல் காக்கா கூட்டமல்ல இது; துரும்பை வீசினால் தூணை வீசுவோம்” – செல்லூர் ராஜூ காட்டம்

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, பா.ஜ.க-வை காக்கா கூட்டம் என்றும், அண்ணாமலை பதவிக்காக வேலை செய்கிறார் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்லூர் ராஜூ, “எங்களுடைய பார்வையில் நாங்கள்தான் எதிர்க்கட்சி. எப்பவுமே அதிமுக, திமுக தான். இதில் ஆயிரக்கணக்கான கிளைகள் இருக்கு. அந்தக் கட்சி எங்கேயோ ஒரு கூட்டம் போட்டால் ஐயாயிரம் பேர், பத்தாயிரம் பேர் கூடுவது பெரிதல்ல. நாங்க எல்லாம் காக்கா கூட்டம் இல்ல, கொள்கை கூட்டம். காக்கா கூட்டங்களுக்குக் காக்கா வந்து சேரும். இரைகளைப் போட்டால் காக்கா கூடத்தான் செய்யும். இரைகள் முடிந்ததும் பறந்திடும். அ.தி.மு.க மேல் எவன் துரும்பைக் கொண்டு வீசினாலும் சரி, இங்க தூணைக்கொண்டு வீசக்கூடியவங்க நாங்க.

அண்ணாமலை

முருகன் ஜி வந்தார். வேலை பார்த்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. தமிழிசை வந்தார் சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அது மாதிரி நமக்கும் வரும் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பாக இருந்து இருந்திருக்கலாமில்ல” என பாஜகவையும், அண்ணாமலையையும் கடுமையாகச் சாடினார்.

மேலும் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, “இன்றைக்கு நான் சொல்கிறேன், சவால் விடுகிறேன் எல்லாக் கட்சியும் தனித்தே போட்டியிடுவோம். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம். திமுக தயாரா. எல்லா கட்சியும் தயார் என்றால், அ.தி.மு.க நாங்கள் தயார். எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்-ம் இதைச் சொல்லத் தயார். எல்லாக் கட்சியும் தயாரா, நாளைக்கே தேர்தல் வைத்துக்கொள்ளலாம். மக்கள் யார் பக்கம் என்பதை நாம் பார்த்திருவோம். இதை அ.தி.மு.க-வின் குரலாகவே எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாக்காட்சியும் தமிழகத்தில் தனித்து நிற்கும்போது, அ.தி.மு.க-வும் தனித்து நிற்கும். இங்கு தொண்டரின் குரல் தான், தலைவரின் குரல்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.