பிரபல நிறுவனம் பாடி ஸ்ப்ரே விளம்பரத்தை சர்ச்சைக்குரிய வகையில் உருவாக்கிய நிலையில் அந்த இரண்டு விளம்பரங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘லேயர் ஷாட்’ என்ற நிறுவனத்தின் பாடி ஸ்பிரே குறித்த இரண்டு விளம்பரங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்த விளம்பரங்களை உடனடியாக யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஒளிபரப்புவதை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த விளம்பரங்கள் பெண்களை அவமதிப்பதாகவும், பாலியல் வன்முறையை ஊக்குவிப்பது போல் இருப்பதால் இந்த விளம்பரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சீன அறிவிப்பால் பாகிஸ்தான் கொண்டாட்டம்.. அப்போ இலங்கை..!
ஷாட் பாடிஸ்ப்ரே
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் போது தான் முதல் முதலாக இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இந்த விளம்பரத்தில் ‘ஒரு அறையில் ஒரு இளம் ஜோடி பாலுறவுக்கு தயாரான போது அந்த அறைக்குள் நுழையும் நண்பர்கள், ஷாட் எடுத்துக்கொள்ளலாமா? என்று கேட்கிறார்கள். அதற்கு அந்த இளைஞன் சரி என்று சொல்கிறார். இதனை பார்த்து அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்த நிலையில், நண்பர்களில் ஒருவர் ஷாட் என்ற பாடிஸ்ப்ரே பாட்டிலை எடுத்து உடலில் அடித்துக்கொண்டு, இந்த ஷாட்டைத்தான் சொன்னேன்’ என்று கூறுகிறார்.
சர்ச்சை விளம்பரம்
அதேபோல் இன்னொரு விளம்பரத்தில் ஒரு பெண் ஷாப்பிங் மால் ஒன்றில் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் நான்கு இளைஞர்கள், ‘நாங்கள் நான்கு பேர் இருக்கின்றோம், ஆனால் இங்கே ஒன்றுதான் இருக்கிறது’ என்று கூற இன்னொருவர் ‘ஷாட் எடுத்துக்கலாமா? என்கிறார். இதனால் அதிர்ந்து போகும் அந்த பெண் அந்த நால்வரையும் பார்த்த போது, அங்கு இருக்கும் ஒரே ஒரு ஷாட் பாடிஸ்ப்ரே பாட்டிலை நால்வரும் எடுத்து அடித்து கொள்கின்றனர்.
பெண்கள் அவமதிப்பு
இந்த இரண்டு விளம்பரங்கள் பெண்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டு பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதால் இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த விளம்பரங்கள் ஆணாதிக்கத்தின் விஷமத்தனத்தை மோசமாக வெளிப்படுகின்றன’ என்றும் அவர் கூறி இருந்தார்.
தடை
மேலும் அவர் இந்த டுவிட்டை டெல்லி காவல்துறை மற்றும் இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் ஆகியவற்றின் டுவிட்டர் பக்கத்திற்கும் டேக் செய்திருந்தார். இதனையடுத்து உடனடியாக இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இரண்டு விளம்பரங்களையும் ஒளிபரப்புவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, விளம்பரதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Govt orders Twitter, YouTube to take down controversial body spray ads
Govt orders Twitter, YouTube to take down controversial body spray ads | layer shot, body spray, advertisement, லேயர் ஷாட், விளம்பரம், பாடிஸ்ப்ரே