நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட.
நம்மில் எத்தனை பேர் தினமும் பால் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். அதிலும் நம்மில் பலர் பாலுடன் சில பழங்களை சேர்த்து சுவையான வடிவில் உட்கொள்கிறார்கள்.
பாலை பழங்களுடன் சேர்த்து உட்கொள்ளும் போது உடலுக்கு சில நன்மைகளை தருகின்றது.
இப்போது எந்தெந்த பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதை பார்ப்போம்.
- நன்கு கனிந்த இனிப்பான மாம்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அது இதயம், கண்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து சீராக்குகிறது.
- வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து, சுவைக்கு தேனையும் கலந்து உட்கொண்டால் பலவீனமானவர்களின் உடல் வலுவாகும் மற்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் நல்லது.
- அவகேடோவை பாலுடன் சேர்த்து உட்கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கியமாக இது கொழுப்புத் திசுக்களுக்கு ஊட்டமளிக்கிறது.
- உலர் பழங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலில் இரத்தத்தின் அளவு மேம்படுகிறது மற்றும் இது ஒரு நல்ல மளமிளக்கியாகவும் விளங்குகிறது. அதுவும் உலர்ந்த அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொண்டால், உடலில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தின் அளவு அதிகரிப்பதோடு, குடலும் சுத்தமாகிறது. பேரிச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடல் எடை அதிகரிக்கிறது மற்றும் இது உடலை வலுவாக்குகிறது.