பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தகுதிபெற்றார். அரை இறுதியில் களமிறங்கிய அலெக்சாண்டர் செவரவ், ரபேல் நடால் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் செட்டை 7-க்கு 6 என்ற கணக்கில் வென்ற செவரவ், இரண்டாவது செட் ஆட்டத்தின் போது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து, ரபேல் நடால் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் காஸ்பர் ரூட்டுடன், நடால் மோதவுள்ளார்.