கல்குடியில் மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கல்குடி பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் எழுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் இவரது மகன் தங்கவேலு மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
தங்கவேலு மற்றும் அவரது தந்தை ஆகியோர் குளத்தில் மீன்களை பிடித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியிலுள்ள சேற்றில் தங்கவேல் சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கி உள்ளார்.
இதனையடுத்து இளைஞரை தண்ணீரில் தேடியபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மீன்பிடி திருவிழாவின்போது கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.