போன வேகத்தில் திரும்பி வரும் இந்திய தேயிலைகள்: ஏற்றுமதியில் என்ன பிரச்சனை?

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் தேயிலைகள் பெரும்பாலும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் இந்திய தேயிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பூச்சி மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் அதிகம் இருப்பதாக திருப்பி அனுப்பும் நாடுகள் குற்றம் சாட்டி உள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் இலங்கையிலிருந்து தேயிலைகள் பெருவாரியாக சப்ளை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது இலங்கை பெரும் பொருளாதார தட்டுப்பாட்டில் சிக்கி வருகிறது.

இதனால் அந்நாடு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் இலங்கையின் தேயிலை மார்க்கெட்டை உலக அளவில் இந்தியா பிடிக்கலாம் என்று கருதி தேயிலை ஏற்றுமதியை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.

கூகுளுக்கு போட்டியாக தேடுபொறி: ஆப்பிள் முயற்சி வெற்றி பெறுமா?

தேயிலை ஏற்றுமதி

தேயிலை ஏற்றுமதி

2021 ஆம் ஆண்டில் 195.90 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியா ஏற்றுமதி செய்த நிலையில் இந்த ஆண்டு 300 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பூச்சிக்கொல்லி

பூச்சிக்கொல்லி

இந்த நிலையில் இந்திய தேயிலைகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்கள் கலந்து இருப்பதாக பல நாடுகளில் இந்திய தேயிலையை திருப்பி அனுப்பி வருகின்றன. அதுமட்டுமின்றி உள்ளூரிலும் பல நிறுவனங்கள் தேயிலைகளை திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தேயிலையின் தரம்
 

தேயிலையின் தரம்

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தேயிலைகளும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் தயாரித்து வருகின்றன. இருப்பினும் பெரும்பாலான தேயிலை வாங்கும் நாடுகள் அவற்றை திருப்பி அனுப்புவதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள்

விதிமுறைகள்

பல நாடுகள் தேயிலைக்கான கடுமையான நுழைவு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்று கூறியுள்ள அன்ஷுமான் கனோரியா பெரும்பாலான நாடுகள் EU தரநிலைகளின் மாறுபாடுகளைப் பின்பற்றுகின்றன என்றும், அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளை விட மிகவும் கடுமையானவை என்றும் கூறியுள்ளார்.

தர நிர்ணய ஆணையம்

தர நிர்ணய ஆணையம்

எனவே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று பலர் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். தேயிலை என்பது ஒரு ஆரோக்கிய பானமாக கருதப்படுவதால் தரத்தில் சமரசம் இருக்கக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏற்றுமதியாளர்கள்

ஏற்றுமதியாளர்கள்

இந்த நிலையில் தேயிலை வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், உற்பத்தியாளர்கள் தற்போதுள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விதிமுறைகளை மாற்றியமைக்கும் பிரச்சனை குறித்து விரைவில் ஆலோசனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஏற்றுமதி

இந்தியாவின் ஏற்றுமதி

இந்தியா கடந்த 2021ஆம் ஆண்டு ரூ. 5,246.89 கோடி மதிப்பிலான தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Many Countries Send Back Indian Tea Supplies Over High Pesticide Content

Many Countries Send Back Indian Tea Supplies Over High Pesticide Content | போன வேகத்தில் திரும்பி வரும் இந்திய தேயிலைகள்: ஏற்றுமதியில் என்ன பிரச்சனை?

Story first published: Saturday, June 4, 2022, 15:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.