மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த கள்ளக்காதலன் சுட்டுக் கொலை: உத்தரபிரதேசத்தில் பயங்கரம்

லக்னோ: தனது மனைவியிடம் தகாத உறவு வைத்திருந்த கள்ளக்காதலனை, உத்தரபிரதேசத்தை சேர்ந்த கணவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அடுத்த மலிஹாபாத் கிராமத்தை சேர்ந்த சேனு (35) என்பவர் இங்குள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராக்கா என்ற விம்லேஷ், குளிக்க சென்ற சானுவை வழிமறுத்தார். பின்னர் அவரை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டார். சம்பவ இடத்திலேயே சேனு ரத்த வெள்ளத்தில் பலியானார். சானுவை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்த சிலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சதீஷ் என்பவர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய விம்லேஷ் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்த போலீசார், சேனுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து லக்னோ ரூரல் எஸ்பி ஹிருதேஷ் குமார் கூறுகையில், ‘சேனு என்ற இளைஞரை விமலேஷ் சுட்டுக் கொன்றார். விமலேஷின் மனைவியிடம் சேனுவுக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதனால் ஆத்திரமடைந்த விமலேஷ், சேனுவை பலமுறை எச்சரித்துள்ளார். இருந்தும் அவ்வப்போது அவரது மனைவிக்கும் சேனுவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. ஒருகட்டத்தில் இருவருக்குமான நெருக்கம் அதிகமானதால், சேனுவை விம்லேஷ் சுட்டுக் கொன்றார். தலைமறைவாக உள்ள விம்லேஷை தேடி வருகிறோம்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.