புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு 36 குழந்தைகளிலும் ஒரு குழந்தையானது ஒரு வயதுக்குள் இறப்பதாக இந்திய பதிவாளர் ஜெனரலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகள் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது, ஒரு நாடு அல்லது ஒரு பிராந்தியத்தின் ஒட்டு மொத்த சுகாதார சூழ்நிலையை சுட்டிக்காட்டும் முக்கிய அளவுகோலாக கருதப்படுகிறது. இதன்படி, இந்தியாவில் காணப்படும் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறித்த புள்ளி விவரத்தை இந்திய பதிவாளர் ஜெனரல் குழு வெளியிட்டுள்ளது. அதில், 1971ம் ஆண்டு இருந்த சூழலுடன் தற்போதைய நிலைமை ஒப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 1971ம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகள் பிறந்தால், 129 குழந்தைகள் இறந்துவிடும். தற்போது ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் 28 குழந்தைகள் இறக்கின்றன. இது நான்கில் ஒரு பங்காகும். கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் 36 சதவீதம் குறைந்துள்ளது. தேசியளவில் 44ல் இருந்து 28 ஆக குறைந்துள்ளது. எனினும், தேசிய அளவில் ஒவ்ெவாரு 36 குழந்தைகளிலும் ஒரு குழந்தையானது முதல் பிறந்தநாளுக்கு முன்பாகவே இறந்து விடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அகில இந்திய அளவில் குழந்தை பிறப்பு விகிதமானது கடந்த 50 ஆண்டுகளில் வெகுவாக குறைந்துள்ளது. 1971ம் ஆண்டில் 36.9 ஆக இருந்த குழந்தைகள் பிறப்பு 2020ம் ஆண்டில் 19.5 சதவீதமாக ஆக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தை பிறப்பு 11 சதவீதம் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் பிறப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் குழந்தை பிறப்பு 11 சதவீதம் குறைந்துள்ளது.