பெங்களூரு: கன்னட மூத்த நடிகர் உதய் ஹுட்டினகத்தே உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த உதய் ஹுட்டினகத்தே (61), பெங்களூரு ராஜாஜி நகரில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக நரம்புக்கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பட வர்த்தக சபை உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த நடிகரான உதய் ஹுட்டினகத்தே ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு மனைவி லலிதாஞ்சலி, 2 மகன்கள் உள்ளனர்.