உக்ரைனுக்கு வழங்கப்பட்ட வான் தடுப்பு ஆயுதங்கள் கொட்டைகளைப் போல் நொறுங்குகின்றன என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் உக்ரைனின் கிழக்கு பகுதியில் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளின் அதிநவீன ஆயுதங்கள் உக்ரைனுக்கு தேவை என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை முன்வைத்து இருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான வான் தாக்குதல் ஆயுதங்கள் முதல் பல்வேறு வகையான அதிநவீன மேற்கத்திய ஆயுதங்களை சுமார் 700 மில்லியன் மதிப்பிற்கு வழங்கியது.
இதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்த நிலையில், இதற்கான தக்க விளைவுகளை மேற்கத்திய நாடுகள் சந்திக்க நெரிடும் என எச்சரித்து இருந்தது.
இந்தநிலையில், ரஷ்யாவின் தொலைக்காட்சி நிறுவனமான Rossiya-1 TVக்கு ஜனாதிபதி புடின் அளித்த பேட்டியில், ஆமெரிக்காவின் பாதுகாப்பு ஆயுதங்கள் கொட்டைகளைப்(nuts) போல் விரிசல் அடைவதாக தெரிவித்தார், அத்துடன் டஜன் கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அழிப்பதில் ரஷ்யா மிகப்பெரிய வெற்றியை பெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனில் வீரர்களை காப்பாற்ற…வானில் பறந்த ரஷ்ய ஜெனரலின் இறுதி நிமிடங்கள்: பரபரப்பு காணொளி
ரஷ்ய ஜனாதிபதியின் இந்த கருத்தானது, உக்ரைனுக்கு மேம்பட்ட ராக்கெட் அமைப்பு உட்பட கூடுதலான ஆயுதங்களை தருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அளித்த வாக்குறுதியை அடுத்து வெளிவந்துள்ளது.