ராணாவுக்கு அதிஷ்டத்தை கொடுப்பாரா சாய்பல்லவி
தமிழில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சாய் பல்லவி. இந்நிலையில் தெலுங்கில் ராணாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள விராட பருவம் படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. 2020 கொரோனா காலகட்டத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படம் சில பிரச்னைகளால் தாமதமாகி வந்தது . இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படம் ரிலீஸிற்கு தயாராகி உள்ளது.
சமீபகாலமாக தெலுங்கில் ராணா நடித்து வரும் படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. அதேசமயம் சாய்பல்லவி நடிக்கும் படங்கள் வரவேற்பை பெறுகின்றன. இப்படியான நிலையில் இந்த படம் சாய் பல்லவிக்கு மட்டுமல்லாது தனக்கும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கிறார் ராணா. நக்சல் தொடர்பான கதையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த படம் ஜூன் மாதம் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது.