இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவையின் தேவையும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல முன்னணி நிறுவனங்கள் இப்பிரிவு சேவையில் இறங்கி வருகிறது.
சமீபத்தில் துறையில் புதிதாகக் களமிறங்கிய Zepto மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்று முன்னணி நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியை அளிக்கிறது.
இந்த நிலையில் இன்ஸ்டென்ட் டெலிவரி சேவையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் களமிறங்கியுள்ளது.
முதலிடத்தில் டாடா.. அப்போ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப்..!
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியாவில் தற்போது முக்கியச் சேவையாக உருவெடுத்திருக்கும் இன்ஸ்டென்ட் மளிகை பொருட்கள் டெலிவரி சேவையில் இறங்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் ரீடைல் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், காய்கறி, ஆடை, எல்க்ட்ரானிக்ஸ் பொருட்களை ஜியோமார்ட் வாயிலாக ஹோம் டெலிவரி செய்து வருகிறது. இதன் நீட்சியாக ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மளிகை பொருட்களை உடனடியாக டெலிவரி செய்யும் சேவை அளிக்க உள்ளது. இதற்காகப் புதிய மற்றும் தனிச் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ்
ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் சேவை தற்போது மும்பையில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் ஜியோமார்ட் இயங்கும் 200க்கும் அதிகமான நகரங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
90 நிமிட டெலிவரி
மேலும் ஜியோமார்ட் எக்ஸ்பிரஸ் சேவையில் 90 நிமிட டெலிவரி சேவை அளிக்கத் திட்டமிட்டு உள்ளது. இதேபோல் 199 ரூபாய் மினிமம் ஆர்டர் கட்டுப்பாடு உள்ளது.
Reliance Retail enters into instant grocery delivery with new APp Jiomart Express
Reliance Retail enters into instant grocery delivery with new APp Jiomart Express ரிலையன்ஸ்-ன் புதிய சேவை.. பட்டனை தண்டினால் இன்ஸ்டென்ட் டெலிவரி..!