ரீமேக் சீரியலுக்கு தனுஷ் பட டைட்டில்!
ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நம்பர் 1 இடத்தை பிடிக்க தொடர்ந்து பல புது சீரியல்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் மட்டுமே இரண்டு புதிய தொடர்கள் ஒளிபரப்பாக ஆம்பித்துள்ள நிலையில் பல சீரியல்கள் லைன்-அப்பிலும் உள்ளது. இந்நிலையில், மற்றுமொரு புதிய சீரியல் ஜீ தமிழில் வெளிவர உள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்து வரும் 'திரிணாயினி' தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சி ரீமேக் செய்ய உள்ளது. இதில், 'திருமதி செல்வம்' அபிதாவை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அண்மையில் பார்த்தோம்.
தற்போது அந்த தொடருக்கான ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஒரு போட்டோ கசிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பாண்டியராஜன், சோனா உட்பட பல நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இந்த தொடரில் ஹீரோயினாக 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' தொடரில் நடித்த கிருஷ்ண ப்ரியா நாயர் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையில் இந்த ரீமேக் சீரியலுக்கு தனுஷ் படத்தின் டைட்டிலான 'மாரி' என்ற பெயரை வைத்துள்ளனர். எனவே, இந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.