Tamil Serial Actress Priyanka Solo Tour Photos Viral : சின்னத்திரையில் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் பிரியங்கா நல்காரி, ஒரு சில திரைப்படங்களில் சின்ன கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு சின்னத்திரையில் பெரிய அறிமுகத்தை கொடுத்தது ரோஜா சீரியல்.

ரோஜா என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் சிறப்பாக தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வருவதால் மக்கள மத்தியில் ரோஜா என்றே பிரபலமாகியுள்ளார்

இந்த சீரியலில் அர்ஜூனாக நடித்து வரும் சுப்பு சூரியனுக்கு இவருக்குமான ரொமான்ஸ் கட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


அதுமட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் வெளியில் அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ள பிரியங்கா தான் அவுட்டிங் சென்றது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட தவறுவதில்லை.


அந்த வகையில் தற்போது பிரியங்கா வெளியிட்டுள்ள அவுட்டிங் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த இவர், தற்போது அம்மாநிலத்தில் நிலவி வரும் சீசனை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சோலோ சுற்றுலா சென்றுன்னார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“