இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இனி எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் முதல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் வரை அனைத்து துறையும் எலக்ட்ரிக் வாகன பிரிவு வர்த்தகத்தைக் கைப்பற்றுவதற்காகத் தயாராகி வருகிறது.
ஆனால் இந்தியாவில் இப்புதிய எலக்ட்ரிக் வாகன கட்டமைப்பை உருவாக்குவது என்பது எளிதான காரியம் இல்லை. ஒருபக்கம் தொழில்நுட்ப தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மறுபுறம் நிதி தேவை அதிகமாக உள்ளது.
ஆசிம் பிரேம்ஜி, ஷிவ் நாடாருக்கு 1.47 லட்சம் கோடி இழப்பு.. என்ன நடந்தது..!
இந்தியா ஆட்டோமொபைல்
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பொதுவாக முதலீட்டுக்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வெளி சந்தையில் முதலீட்டை திரட்டும் பணிகளைச் செய்யாது. இதனாலேயே இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தனியார் முதலீட்டு நிறுவனங்கள்
ஆனால் தற்போது வர்த்தகச் சூழ்நிலையும், வேகமும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் காரணத்தால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிதி தேவைக்காகத் தனியார் முதலீட்டு நிறுவனங்களை நாடி நிற்கிறது, குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்.
தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள்
இந்திய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தனது உற்பத்தி பணிகளை விரிவாக்கம் செய்வதற்கான நிதியை உலக நாடுகளில் இருக்கும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
2 பில்லியன் டாலர்
இதன் மூலம் உலகளாவிய தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து சுமார் 1.5 முதல் 2 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை இந்திய இரு சக்கர எலக்ட்ரிக் வாகன துறையில் குவிய உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
ஹீரோ எலக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, Pure EV, சிம்பிள் எனர்ஜி, டிவிஎஸ் மோட்டார், Oben மற்றும் Ivoomi ஆகியவை தனியார் முதலீடுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிய நிறுவனங்கள் தலா 100-250 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் என எதிர்பார்ப்பு உள்ளது.
போட்டி
இதே வேளையில் சிறிய நிறுவனங்கள் 30-60 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் யார் எவ்வளவு முதலீட்டை திரட்டப்போகிறது என்ற போட்டியும் இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ்
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் வாகன பிரிவில் தனியார் முதலீட்டை திரட்டியது, இதைத் தொடர்ந்து தற்போது தனியார் நிறுவனங்கள் இதே பாதையைப் பின்தொடர்கிறது. இந்தியாவின் மொத்த இரு சக்கர வாகன சந்தையில் 4 சதவீத சந்தை எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றியுள்ளது.
Electric two-wheeler makers Hero Electric to TVS looks For private equity (PE) funds
Electric two-wheeler makers Hero Electric to TVS looks For private equity (PE) funds