'ஹெலி டூரிஸம்' அறிமுகம்: இலவசமாக ஹெலிகாப்டரில் பறந்த 200 விவசாயிகள்

கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேம்பாடு திட்டத்தின் மூலம் இயக்கப்பட உள்ள ஹெலிகாப்டரில் 200 விவசாயிகள் இலவசமாக பயணம் செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிஸம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிஸம் கொண்டுவரப்பட்டுள்ளது.
image
இந்த நிலையில் ஹெலி டூரிஸம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்து சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர்.

இந்த 2 நாட்களிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடந்த ஹெலிரைடில் சுமார் 200 விவசாயிகள்இலவசமாக பறந்து சென்றனர். அதேபோல் வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகர் செய்திருந்தார்.
image
இதைத் தொடர்ந்து வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் கூடிய ஹெலிரைடு நடத்தப்பட உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.