23 வருடத்திற்கு பின் அமேசான் உயர் அதிகாரி வெளியேறினார்.. அதிர்ச்சியில் ஜெப் பெசோஸ்..!

உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் சேவை நிறுவனமான அமேசான் தற்போது ரீடைல் துறையில் நேரடியாக விற்பனை செய்யும் திட்டத்திலும் இறங்கியுள்ளது.

இதற்காக அமெரிக்காவில் முதல் முறையாக ஆடைகள் நேரடியாக விற்பனை செய்யும் கடையைத் திறந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் வாடிக்கையாளர்களை அதிகரிக்க வர்த்தகத்தைப் பல வழிகளில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

அதானியின் அடுத்த ஆட்டம்: ரூ.1,913 கோடி எஸ்ஸார் பவர் டிரான்ஸ்மிஷனை வாங்குகிறார்

உயர் அதிகாரி வெளியேற்றம்

உயர் அதிகாரி வெளியேற்றம்

இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தில் 23 வருடமாகப் பணியாற்றி வந்த உயர் அதிகாரி ஒருவர் வெளியேறியுள்ளார். இவரது வெளியேற்றம் அமேசான் சிஇஓ அன்டி ஜேசி முதல் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் வரையில் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யார் இவர்..?

டேவிட் கிளார்க்

டேவிட் கிளார்க்

அமேசான் நிறுவனத்தின் சர்வதேச கன்ஸ்யூமர் பிஸ்னஸ் பிரிவின் சிஇஓ டேவிட் கிளார்க் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் பேஸ்புக்-ன் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் வெளியேறிய நிலையில் தற்போது அமேசான் நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான டேவிட் கிளார்க் வெளியேறியது டெக் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

23 வருடம்
 

23 வருடம்

டேவிட் கிளார்க் அமேசான் நிறுவனத்தில் சுமார் 23 வருடம் பணியாற்றிய நிலையில், வேறு வாய்ப்புகளைத் தேடி செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். டேவிட் கிளார்க் தனது MBA படிப்பை முடித்த கையோடு அமேசான் நிறுவனத்தில் 1999ஆம் ஆண்டுப் பணியில் சேர்ந்து பல பதவிகளில் பணியாற்றியவர் தற்போது சர்வதேச கன்ஸ்யூமர் பிஸ்னஸ் பிரிவின் சிஇஓ பதவியில் இருந்து டேவிட் கிளார்க் வெளியேறுகிறார்.

ஆண்டி ஜாஸ்ஸி

ஆண்டி ஜாஸ்ஸி

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி, அடுத்த சில வாரங்களில் கிளார்-ன் பதவிக்குப் புதிய அதிகாரியைத் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கிளார்க்-ன் அமேசான் அலுவலகத்தில் கடைசி நாள் ஜூலை 1 ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Amazon Worldwide Consumer business CEO David Clark left job after 23 years

Amazon Worldwide Consumer business CEO David Clark left job after 23 years 23 வருடத்திற்குப் பின் அமேசான் உயர் அதிகாரி வெளியேறினார்.. அதிர்ச்சியில் ஜெப் பெசோஸ்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.