Elon Musk Twitter: என்ன ஆகப்போகிறது எலான் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தம்!

அமெரிக்காவில் நம்பிக்கைக்கு எதிரான அலுவலர்களால் ட்விட்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக வழக்கறிஞர் குழு ஒன்று எலான் மஸ்கிற்கு எதிராக திரும்பியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை கையக்கப்படுத்துவதற்கு எதிர்பு தெரிவித்து இவர்கள் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

ட்விட்டர் ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் இந்த பிரச்னை புதிதாகக் கிளம்பியுள்ளது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சுமார் 3 லட்சத்து 41 ஆயிரத்து 855 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை பிற கட்டுப்பாட்டாளர்களால் மதிபாய்வு செய்யப்பட வேண்டும்.

மேலும் படிக்க |
BSNL Recharge: பிஎஸ்என்எல் ரூ.22 ரீசார்ஜில் 90 நாள்கள் வேலிடிட்டி… நம்பினால் நம்புங்கள்!

அதுமட்டுமில்லாமல், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த சூழலில், “ஒப்பந்தத்தை நிறுத்துங்கள்” (Stop the Deal) எனும் பரப்புரையை லாப நோக்கமற்ற குழு ஒன்று தொடங்கியுள்ளது.

எலான் மஸ்கிற்கு எதிராக பரப்புரை

“எலான் மஸ்க் விலையுயர்ந்த செம்மறி ஆடுகளை அணிந்த ஓநாய். மஸ்கின் அகந்தை மற்றும் பழி வாங்கும் எண்ணமே, அவரை ட்விட்டரை வாங்குவதற்கு தூண்டியுள்ளது.” என்று அக்கவுண்டபிள் டெக் நிர்வாக இயக்குநர் நிக்கோல் கில் தெரிவித்துள்ளார்.

“இந்த ஒப்பந்தத்தை நாங்கள் நிறுத்தவில்லை என்றால், அவர் ஒரு மெகாஃபோனை தீங்கிழைக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் கொடுப்பார். அவர்கள் தீங்கு, வெறுப்பைத் தூண்டும் செயல்பாடுகளில் ஈடுபடுவர்.” என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க |
Elon Musk Twitter: என்னையா திட்டுற… ஆத்திரத்தில் எலான் மஸ்க் பதிவிட்ட சவுக்கடி ட்வீட்!

இந்த குழுவானது, கையகப்படுத்தும் ஒப்பந்தம் குறித்த அனைத்தையும் உன்னிப்பாக ஆராய, பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தைத் (SEC) தொடர்ந்து பிற சட்ட அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுக்கும்.

பரப்புரையில் MoveOn, SumOfUs, Media Matters for America மற்றும் Center for Countering Digital Hate போன்ற பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடங்கியுள்ளது.

21000mAh Battery Phone: நம்புற மாதிரி இல்லையே… 94 நாள்கள் தாங்கும் பேட்டரியா!

ஒப்பந்த காத்திருப்பு காலம்

எலான் மஸ்க் கையெழுத்திட்ட ஒப்பந்த காத்திருப்பு காலம் முடிந்துவிட்டதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. எனவே, இதன் மீதான முடிவை இனி பங்குதாரர்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ட்விட்டர் பங்குகள் விலை சரிவை சந்தித்தது தொடர்பாக எலான் மஸ்கிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மஸ்கிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) மஸ்க்கிற்கு அனுப்பிய கடிதத்தில், ட்விட்டரை வாங்க முடிவு செய்திருந்த டெஸ்லா நிறுவனர் தனது பங்குகளை அதிகரித்தது தொடர்பாக 10 நாள்களுக்குள் ஏன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.