உணவை சமைப்பது ஒரு கலை என்றால், பொருட்களைப் புரிந்துகொள்வது தூய அறிவியல். முன்னதாக, முளைத்த உருளைக்கிழங்கு மற்றும் அவை சமைக்க பாதுகாப்பானதா இல்லையா என்பதைப் பற்றி பேசினோம். அந்தவகையில், இன்று நாம் பச்சை உருளைக்கிழங்கு மற்றும் அவை நுகர்வுக்கு ஏற்றதா இல்லையா என்பதைப் பற்றி பேசுவோம்.
உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதற்கான காரணம்
அறிவியலின் படி, உருளைக்கிழங்கு நேரடி சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படும் போது, அவை பச்சை நிறமாக மாறத் தொடங்குகின்றன, இந்த பச்சை நிறம் குளோரோபில் இருந்து வருகிறது.
ஒளிச்சேர்க்கைக்கு’ குளோரோபில் இன்றியமையாதது, இவை, பசுந்தாவரங்கள் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலைப் பயன்படுத்திக் கரியமில வாயுவையும், நீரையும் உணவாக மாற்றும் செயல்முறையாகும்.
அவை சாப்பிட பாதுகாப்பானதா?
இல்லை. நேஷனல் கேபிடல் பாய்ஸன் மையத்தின் படி, பச்சை உருளைக்கிழங்கு மனித நுகர்வுக்கு ஏற்றது அல்ல, ஏனெனில் அவை குமட்டல் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள், தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், நிபுணர்களின் கூற்றுப்படி, சமைத்த உருளைக்கிழங்கு கசப்பாக இருந்தால், அது பச்சை உருளைக்கிழங்கு மற்றும் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல என்பதற்கான அறிகுறியாகும்.
பச்சை உருளைக்கிழங்கில் அதிக அளவு சோலனைன் எனப்படும் சேர்மங்கள் இருப்பதால், உருளைக்கிழங்கை கசப்பான சுவைக்கு காரணமாகிறது. மேலும் இது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சிறிதளவு பச்சையாக இருந்தால், சமைத்து சாப்பிடும் முன் உருளைக்கிழங்கின் தோலின் பச்சைப் பகுதிகளை வெட்டிவிடவும்.
உருளைக் கிழங்கை சேமிப்பது எப்படி?
*அதிக வெப்பநிலையை அடையும் அல்லது அதிக சூரிய ஒளி பெறும் பகுதிகளில் உருளைக்கிழங்குகளை வைப்பதை தவிர்க்கவும். எப்போதும் குளிர்ந்த இருண்ட பகுதியில் சேமிக்கவும்.
*பிரிட்ஜ் போன்ற குளிர்ந்த வெப்பநிலை, உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதற்கு காரணமாகிறது, இதன் விளைவாக இனிப்பு சுவை மற்றும் சமைக்கும் போது நிறமாற்றம் ஏற்படுகிறது.
*துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதப் பைகளில் உருளைக் கிழங்கை சேமிப்பது அதன் ஆயுளை நீட்டிக்க சிறந்த சூழலை வழங்குகின்றன.
*உருளைக்கிழங்கை சேமிப்பதற்கு முன் கழுவ வேண்டாம். ஈரப்பதம் ஆரம்பகால கெடுதலை ஊக்குவிக்கிறது.
*முளைகள்’ உருளைக்கிழங்கு வளர முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். உருளைக்கிழங்கை நன்கு காற்றோட்டமான, உலர்ந்த, இருண்ட இடத்தில் சேமித்து வைப்பது முளைப்பதைக் குறைக்கும். உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் முளைகளை வெட்டிவிடவும்.
Kitchen Tips: முளைத்த உருளைக்கிழங்கு சமைக்க பாதுகாப்பானதா?
இனி கலோரிஸ் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.. எப்படினு பாருங்க?
உருளைக்கிழங்கை வேகவைக்க 4 சிம்பிள் டிப்ஸ்.. எப்படினு பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“