திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண்டில் திமுக ஆட்சி குறித்த கருத்துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தியது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தலைமையின் செயல்பாடுகள் மற்றும் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்னென்ன? மக்களுடைய மதிப்பீடு என்னென்ன? என்பது குறித்த கேள்விகளும், எதிர்க்கட்சிகளுடைய செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? எந்தெந்த தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது? இளைஞர்கள் மத்தியில் எந்தெந்த தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா? என்ற கேள்விக்கு புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் அளித்த பதில்கள்
முழுமையாக ஏற்கிறேன் – 25.30%
ஓரளவுக்கு ஏற்கிறேன் – 33.35%
மறுக்கிறேன் – 30.69%
பிற கருத்துகள் – 4.58%
கூற இயலாது, தெரியாது – 6.07%
அதிமுக எதிர்க்கட்சியாக சரிவர செயல்படுகிறதா? என்ற கேள்விக்கு புதிய தலைமுறை நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் அளித்த பதில்கள்
மிகச் சிறப்பாக – 15.36%
சிறப்பாக – 19.51%
நிறைவு – 16.15%
நிறைவில்லை – 38.03%
பிற கருத்துகள் – 3.30%
கூற இயலாது, தெரியாது – 7.66%
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM