Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை!
கட்டாயப்படுத்தாத நிலையில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை. கட்டாய மதமாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் கூறப்படுவதை ஆதாரமாக ஏற்க முடியாது. தான் விரும்பும் மதத்தை பின்பற்ற அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் உரிமை உள்ளது என பணம், பரிசுகளின் மூலம் நடைபெறும் மத மாற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கில் கார்த்தியை அமலாக்கத்துறையினர் கைது செய்ய எந்தத் தடையும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
Tamil News Latest Updates
அதிகரிக்கும் கொரோனா!
தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்!
சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.21.98 லட்சம் அபராதம், பின் இருக்கையில் அமர்ந்தவர்களிடம் ரூ.18 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை சென்னை துறைமுகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கார்டிலியா என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து, புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.
மதுரை, விளாங்குடி பகுதியில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஒப்பந்த பொறியாளர் சிக்கந்தர், கண்காணிப்பாளர் பாலு, ஓட்டுநர் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து, இந்திய தொல்பொருள் துறை மீட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டது.