ஒகினாவாவில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக தென் கொரிய தலைமை ராணுவ அதிகாரி அறிவித்துள்ளார்.
வடகொரியாவின் அடுத்தடுத்த அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் கிழக்கு ஆசிய பிராந்தியங்களில் அதிகப்படியான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ஒகினாவாவில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருப்பதாக கூட்டு ராணுவ பயிற்சியின் தென் கொரிய தலைமை அதிகாரி(JCS) சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை வரை மூன்று நாள் நீடித்த திட்டமிடப்பட்ட கூட்டு ராணுவப் பயிற்சியானது வடகொரியாவின் சாத்தியமான செயல்களுக்குத் தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு வெற்றி…அமெரிக்க ஆயுதங்கள் கொட்டைகளைப் போல் நொறுங்குகின்றன: புடின் பேட்டி!
அத்துடன், ஒருங்கிணைந்த ராணுவ குழுக்களின் இந்த பயிற்சியின் மூலம், வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு தென் கொரியா மற்றும் அமெரிக்கா கடுமையான பதிலளிக்கும் உறுதியை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் ராணுவ தலைமை அதிகாரி(JCS) Yonhap செய்தி நிறுவனத்திடன் தெரிவித்துள்ளார்.