அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை மாளிகை மீது தகவலின்றி விமானம் பறந்த நிலையில், அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
டெலாவேர் அருகே உள்ள ரெகோபாத் கடற்கரை பகுதியில் பைடன், அவரது மனைவியுடன் தங்கியிருந்தார். அப்போது, அவரது மாளிகை மீது சிறிய ரக விமானம் ஒன்று தவறுதலாக நுழைந்தது.
இதனையடுத்து, அந்த விமானம் இடைமறித்து திசை திருப்பிவிடப்பட்ட நிலையில், பைடன், மனைவி ஜில் பைடன் ஆகியோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், அந்த விமானத்தின் விமானியிடம் ரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்