அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கி இருந்த மாளிகை மீது விமானம் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை மாளிகை மீது மர்ம விமானம் பறந்த நிலையில், அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை எனவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இந்த விமானம் குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானியிடம் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை
டெலாவேர் அருகே உள்ள ரெகோபாத் கடற்கரை பகுதியில் பைடன், அவரது மனைவியுடன் தங்கியிருந்த நிலையில், அவரது மாளிகை மீது சிறிய ரக விமானம் ஒன்று நுழைந்துள்ளது.
இதனையடுத்து, அந்த விமானம் இடைமறித்து திசை திருப்பிவிடப்பட்ட நிலையில், பைடன், ஜில் பைடன் ஆகியோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த விமானத்தின் விமானியிடம் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.