வாசனை திரவிய விளம்பரம் ஒன்றில், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாகவும், அதனை இளைஞர்களை இரட்டை அர்த்தத்தில் பேச வைத்து, நடிக்க வைத்து எடுக்கப்பட்ட விளம்பரம் ஒன்று, பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளொன்றுக்கு 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி விவரம் தெரிவிக்கிறது. கடந்த வாரம் ஹைதராபாத்தில் சிறுமி ஒருவர் அரசியல் பிரமுகர்களின் மகன்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது.
இந்த சூழ்நிலையில், ஒரு வாசனை திரவியம் விளம்பரம் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் விதமாக, இரட்டை அர்த்தத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
படுக்கையறை மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் எடுக்கப்பட்ட அந்த விளம்பரத்தில், ஒரு பெண் நான்கு ஆண்கள் என்ற விதத்தில் அந்த வாசனை திரவியம் – பெண்ணையும் இரட்டை அர்த்தத்தில் இந்த இளைஞர்கள் பேசுவது போல் அந்த விளம்பரம் அமைந்துள்ளது.
அந்த விளம்பரத்தில் ‘நாம நாலு பேர்., ஒன்னு தான் இருக்கு., அது யாருக்கு’ என்று இளைஞர்கள் கேள்வி கேட்க, அவர்கள் நோக்கும் திசையில் இளம்பெண் ஒருவரும், அந்த நிறுவனத்தின் வாசனை திரவிய பாட்டில் ஒன்றும் காட்சிப்படுத்தப்படுகிறது.
பின்னர் அந்த இளம் பெண்ணை நோக்கி அந்த இளைஞர் வரவே, அவர் அருகில் இருந்த சென்ட் பாட்டிலை எடுத்து அதனை அடித்துக்கொள்கிறார். இத்துடன் இந்த விளம்பரம் முடிகிறது.
இதேபோல் மற்றொரு விளம்பரத்தில் ஒரு காதல் ஜோடி படுக்கை அறையில் அமர்ந்து இருக்கும்போது. திடீரென கதவைத் திறக்கும் அதே நான்கு பேர். இதே வசனத்தை கூறுகின்றனர். இந்த இரண்டு விளம்பரங்களும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த விளம்பரம் குறித்து ஏஎஸ்ஐசி (ASCI – அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா) க்கு புகார் செல்லவே, அவர்கள் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை உடனே திரும்பப்பெறுமாறு, அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
Can’t find the ad online but here it is, apparently being played during the match. I didn’t see it till @hitchwriter showed it to me
Who are the people making these ads really? pic.twitter.com/zhXEaMqR3Q
— Permanently Exhausted Pigeon (@monikamanchanda) June 3, 2022