பெண்கள் இருவரிடையே நிகழ்ந்த வாக்குவாத தகராறில் எட்டு மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பலியான சோகம் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த வெள்ளியன்று (ஜூன் 03) ராஜர்ஹத் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஷானாஸ் காதுன் (22) என்ற பெண்ணுக்கும் யாஸ்மினா பிபி என்ற பெண்ணுக்கும் இடையே அவர்களின் வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது ஷானாஸ் வைத்திருந்த அவரது எட்டு மாத குழந்தையை இழுத்து பறித்த யாஸ்மினாவும் மற்ற நான்கு குடும்பத்தினரும் தரையில் தூக்கி எறிந்திருக்கிறார்கள். இதனால் அக்குழந்தையின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது.
Also Read: கான்பூர் வன்முறையில் ஈடுபட்டோரின் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும் – உ.பி. காவல்துறை
இதனைக் கண்ட குடும்பத்தினர் சிலர் காயமடைந்த குழந்தையை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இதனிடையே யாஸ்மினாவையும் அவருடன் இருந்த நால்வரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீசாரை வரவழைத்திருக்கிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை எந்த வித அசைவும் இல்லாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் சனிக்கிழமை காலை (ஜூன் 4) குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதனையடுத்து யாஸ்மினா, சாந்தினி உள்ளிட்ட நால்வரை போலீசாரை கைது செய்திருக்கிறார்கள். இறந்த குழந்தையின் தாய் ஷானாஸ் காதுன் ‘மாமனார் மாமியார் இடையே சண்டை நடந்ததை அடுத்து அங்கு சென்றோம். அப்போதுதான் யாஸ்மினாவும் சாந்தினியும் என் குழந்தையை கொன்று விட்டார்கள். எங்களுக்கு நீதி வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
Also Read: அடகு வைத்த நகைகளை கொள்ளை நாடகமாடி சுருட்டிய பெண் மேனேஜர்.. திருப்பதியில் நடந்த துணிகரம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM