உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில் கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசா அருகே உக்ரைன் இராணுவ விமானம் ஒன்றை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.
இந்த விமானத்தை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, சுமி பிராந்தியத்தில் பீரங்கி பயிற்சி மையத்தை ஏவுகணை தாக்குதல் நடத்தி ரஷிய படைகள் அழித்துள்ளன.