.உலக சுற்றாடல் தினம் இன்றாகும்.
இத்தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான சுற்றாடல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும்.
இலங்கையில் சுற்றாடல் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மரக்கன்று நடுகை உட்பட இன்னும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, மானிட சுற்றாடல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு அந்த வருடம் ஜுன் மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை சுவீடனின் ஸ்ரோக்கோம் நகரில் நடைபெற்றது.
பின்னர் ஜுன் மாதம் ஐந்தாம் திகதி உலக சுற்றாடல் தினமாக அறிவிக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினம் முதல்முதலாக 1974ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. சுற்றாடலைப் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என்ற வகையில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. பூமி ஒரே கூரையின் கீழ் என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.