பெங்களூரு : கணவர், மாமனார் மீது கன்னட நடிகை சைத்ரா ஹல்லிகேரி தொடர்ந்த வழக்கில், எப்.ஐ.ஆர்., மீதான நடவடிக்கை எடுக்க, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கன்னட திரைப்பட நடிகை சைத்ரா. இவர், தன் கணவர் பாலாஜி போத்தராஜு, மாமனார் போத்தராஜு ஆகியோர், தன் வங்கி கணக்கை பயன்படுத்தி, தங்க நகை கடன் வாங்கினர். என்னை ஏமாற்றி விட்டனர் என மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இந்நிலையில், தங்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர்., மீது தடை விதிக்க கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாலாஜியும், அவரது தந்தை போத்தராஜூம் மனு தாக்கல் செய்திருந்தனர்.இவர்கள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் கூறுகையில், ”பாலாஜி போத்தராஜ், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்ததால், அவருக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார்,” என்றார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எப்.ஐ.ஆர்., தொடர்பாக மேற்கொண்ட விசாரிக்க, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
பெங்களூரு : கணவர், மாமனார் மீது கன்னட நடிகை சைத்ரா ஹல்லிகேரி தொடர்ந்த வழக்கில், எப்.ஐ.ஆர்., மீதான நடவடிக்கை எடுக்க, கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கன்னட திரைப்பட
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.