கனடாவில் 72 வயது முதியவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
Kitchener நகர் பொலிசாருக்கு Charles and Gaukel தெருவுக்கு வரும்படி வெள்ளிக்கிழமை இரவு அவசர தகவல் வந்தது.
அங்கு வந்து பொலிசார் விசாரித்த நிலையில் 72 வயதான முதியவரை கைது செய்தனர்.
பொலிசார் கூறுகையில், அங்குள்ள இருக்கையில் இளம்வயது நபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
அப்போது அவர் அருகே இருந்த முதியவர் இளம்வயது நபரிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
Dan Lauckner / CTV Kitchener
பாதிக்கப்பட்ட நபரும், முதியவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள்.
சம்பவத்தை தொடர்ந்து சிலர் எங்களுக்கு போன் செய்தனர், இதையடுத்து அங்கு சென்றோம்.
Gaukel தெருவில் சம்பவத்தின் போது திருவிழா நடந்து கொண்டிருந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.