திருநாகேஸ்வரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அன்பழகன் (58). பர்னிச்சர் வியாபாரம் செய்து வரும் இவருக்கு ராணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், அன்பழகனுக்கும் ராணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராணி அவரது தாயார் மீனாட்சி (65) ஆகிய இருவரும் மொட்டை மாடியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தகவலறிந்த திருவடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன், ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயும் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
