தூத்துக்குடி சங்கரன்கோவில் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஸ்கார்பியோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கழுந்துவிளையை சேர்ந்த பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் கடையநல்லூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார்.
மேலநீலிதநல்லூர் வழியாக சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.
உடனடியாக காரை சாலையோரம் நிறுத்தி உள்ளே இருந்த 6 பேரும் கீழே இறங்கியுள்ளனர். சிறிது நேரத்திலேயே கார் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்துள்ளது.