சீனாவில் புல்லெட் ரயில் தடம் புரண்டு விபத்து.!

சீனாவில் புல்லெட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

தென்கிழக்கு மாகாணமான கின்யாங்கில் இருந்து கன்ங்சொவ் பகுதிக்கு,136 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது. ரோங்க்ஜுகங் என்ற பகுதியில் உள்ள நிலையத்தின் சுரங்கப்பாதையில் வந்த போது 2 பெட்டிகள் தடம் புரண்டது.

இந்த விபத்தில், ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பயணிகள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மண்சரிவு ஏற்பட்டதை அறிந்து அவசரகால பிரேக்கை ஓட்டுநர் பயன்படுத்தியதால் விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.